Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
Editor's Text Message
 03-07-2010
 
அன்பு சொந்தங்களுக்கு,
இனிய நல்வணக்கம்,
தங்கள் அனைவரையும் இணையதளத்தின் வாயிலாக தொடர்பு கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
 
உலகெங்கிலும் பரவி உள்ள நமது சமுதாய மக்கள் ,தங்கள் சொந்தங்களை  அறியவும் ,
அன்பை பரிமாறி கொள்ளவும் ,
குழுவாக இணைந்து உள்ளவர்களுடன் புதியவர்கள் எளிதாக இணையவும், 
திருமணத்திற்கு பொருத்தமான  மக்களை அறியவும்,
சமுதாய செய்திகளை அறியவும் ,
ஆலோசனைகளை வழங்கவும் / பெறவும்,
மகிழ்ச்சியை பகிர்ந்து  கொள்ளவும் 
இந்த 
இணையதளம் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம்.
 
முன்னேறிய வகுப்பை சார்ந்த நாம், வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கி உள்ளதால் , 
நமது இளைய சமுதாயத்திற்கு உதவிடும் நோக்கில்  JOBS    அமைக்கப்பட்டுள்ளது .
இதனை பயன்படுத்துவதன்  மூலம், நமது சமுதாயத்தின்  முன்னேற்ற வேகம் அதிகரிக்கும் என நம்புகிறோம் . 
 
நாஞ்சில் வெள்ளாளர்  சமுதாய வளர்ச்சியில் அக்கறையுடன் உழைப்பவர்களை இத்தளத்தின் மூலம்  அறிந்து, அவர்களுடன் கை கோர்க்க அனைவரையும்  அழைக்கின்றோம்.

மீண்டும் தொடர்பு கொள்கிறேன், நன்றி !
அன்புடன்,
s. சரவணன்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
02 -08 -2010
 
அன்பு சொந்தங்களுக்கு,
இனிய நல்வணக்கம்,
 
அறிவார்ந்த சிந்தனையாலும்,செயலாலும் அரசை வழி நடத்திய நமது நாஞ்சில் வெள்ளாளர் சமுதாயம் , இன்று சிதறி,  அடையாளம் இன்றி , இப்படி ஒரு இனம் இருந்தது என்பதை பின்வரும் சந்ததிகள் வரலாற்றில்   மட்டுமே அறியும் அளவிற்கு சிதறுண்டு வருகிறது என்பதை உற்று நோக்கும் அனைவரும் அறிவர் .
 
நமக்காக மட்டும் அல்லாமல் , நம் தலைமுறைகளுக்காக நாம் ஒன்றிணைந்து, ஒற்றுமையை உணர்த்தி , ஒரு குழுவாக இணைந்து, நமது சமுதாய  சங்கத்தின்  மூலம் பலமாக இணைந்து,போராடினால்  
மட்டுமே எதையும் அடைய முடியும் என்பதை உணர்வீர் !!.
நமக்குள் உள்ள வேற்றுமைகளை வேர் அறுப்பீர் !
உடனே உறுப்பினர்களாகி தலைமைக்கு பலம் சேர்ப்பீர் !
தங்களின் குழு / சங்கங்களின் செயல்பாட்டை உற்று நோக்கி, நோக்கம்  சிதறாமலும் ,திசை மாறாமலும் பாதுகாப்பீர் !
நமது சமுதாய வளர்ச்சியில்,தொலை நோக்கு சிந்தனையுடன் செயல்பட,தங்களின் பங்களிப்பை அளிக்க தவறாதீர்கள் !
வாருங்கள் சொந்தங்களே,நமது சமுதாயம் முன்னேற கைகோர்போம் . 
மீண்டும் தொடர்பு கொள்கிறேன், நன்றி !
 அன்புடன்,
s. சரவணன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

01 -09 -2010
அன்பு சொந்தங்களுக்கு,
இனிய நல்வணக்கம்,
 ஜூலை 2011-ல் இந்தியா முழுவதும்  சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மத்திய அரசு  முடிவு செய்து உள்ளது. இந்த சாதி வாரி கணக்கெடுப்பே அடுத்த 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு ,கல்வி  போன்றவைகளில் இட ஒதுக்கீடு செய்ய  வழிவகை செய்கிறது. 
 
சுதந்திர போராட்டத்திலும் , நம் இந்திய திரு நாட்டின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறையுடன் உழைத்த நம்மை  கடந்த 54 ஆண்டுகளாக , மத்திய / மாநில  அரசில்  முன்னேறிய வகுப்பு  என  ஒதுக்கி,  நமது  நாஞ்சில் வெள்ளாள சமுதாயமே மூன்று தலைமுறைகளாக  அரசினால்  எந்த  சலுகையும் பெற முடியாமல்,  இட ஒதுக்கீடு மூலம் புறக்கணிக்க பட்டுள்ளோம் .
 
Dr . அம்பேத்கர் சட்ட முன்வரைவில், இட ஒதுக்கீட்டை அமுல் படுத்தியபோது ,  இட ஒதுக்கீடு  இருபது {20 } ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் , பின் பொருளாதார ,வேலை வாய்ப்பு, கல்வி போன்ற நிலைமைகளை ஆராய்ந்து ,அதற்கு ஏற்ப  அனைத்து சமூகத்தினரும்  சம நிலையில்  உயர்வடையும்  பொருட்டு இட ஒதுக்கீட்டை  மாற்ற வேண்டும் என்று  கூறினார் . நமது சமுதாய சான்றோர்கள்  மற்றும் பெரியவர்கள் நமது இன்றைய நிலையை எடுத்து கூறியும் , பல வழிகளில் முயற்சித்தும், போராடியும் ,  மத்திய / மாநில  அரசுகள்   இதுவரையில்  கண்டு கொள்ளவில்லை . தற்போது சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க இருப்பதன்   மூலம் ஒரு  சிறு வெளிச்சம் தென்படுகிறது . இதனை பயன்படுத்தி நமது குரல் ஓங்கி ஒலிக்க செய்வோம்.    
 
நாம்  நமக்குள் இட ஒதுக்கீடு   பற்றி விரிவான விவாதங்களை வைத்து விடை காண வேண்டும். பின்வரும் நம் தலைமுறை பயன்பெறாமல் போனாலும் ,பாதிப்பு அடையாமல் காப்பது  இன்று  உள்ளோர்களின் கடமை   என்பதை மறந்து விட கூடாது . 54 ஆண்டுகளுக்கு மேல் மிதி பட்டுள்ள நாம் இனி அரசிடம் கேட்க வேண்டியது  "பின் தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு "  [அல்லது] "பின் தங்கியுள்ள  வகுப்பாக நம்மை மாற்றி, இட ஒதுக்கீட்டில் முன்னிடம்" . 
 
தற்போது 3 லட்சம் மக்கள்தொகையை மட்டுமே கொண்டுள்ள  நாஞ்சில் வெள்ளாள சமுதாயத்தை   சாதி வாரி கணக்கெடுப்பு 2011 -ல் நம்மை எவ்வாறு முழுமையாக அடையாள படுத்துவது என்பதை ஆராய தயாராவோம் .

மீண்டும் தொடர்பு கொள்கிறேன், நன்றி !
 அன்புடன்,
s. சரவணன்
SSL Certificate