கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை
கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை நவ., 16, 1914ல் பிறந்தவர். விவசாயிகளின் உற்ற நண்பர். அப்போது அரசாங்கத்தின் நிலம், மகாராஜாவின் நிலம், மகாராஜா குடும்பத்தாரின் நிலம், பத்மநாப சுவாமிக்கான நிலம் எனப் பாகுபாடு செய்யப்பட்டு, அதற்குத் தனித்தனியான நில வரி கள் விதிக்கப்பட்டன. பண்டார வகை, ஸ்ரீ பண்டாரவகை, ஸ்ரீபாத வகை, கண்டு கிரிஷி இப்படி வரி களுக்குப் பெயர். நாஞ்சில் நாட்டின் பெரும் நிலங்கள் பத்மநாப சுவாமிக்கு என ஒதுக்கப்பட்டு அதற்கு, மணி யகரம் என்ற வரி மிக அதிகப்படி யாக வசூலிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏப்., 3, 1949ல், மணியகரம் கண்டன மாநாடு ஒன்றை கடுக்கரையில், நீதிபதி சத்யநேசன் தலைமையில் நடத்தி, மாநாட்டைக் கவிமணி திறந்து வைத்தார். பெரும் அளவில் விவசாயிகள் தங்கள் சொந்தப் பிரச்னைக்காக கூடிய முதல் மாநாடு அது. மணியரகம் நிலவரியில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை விடுவிக்க 18 ஆண்டு போராடி வெற்றி கண்டவர். கடுக்கரை உயர் நிலைப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். குமரி மாவட்ட விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர்.
SSL Certificate