டி.எஸ்.இராமசாமி பிள்ளை
டி.எஸ்.இராமசாமி பிள்ளை

தேரூரில், ஜூன் 8, 1918ல் பிறந்த டி.எஸ்.ராமசாமி மிகச் சிறந்த தேசபக்தர். தொழிற் சங்கத் தலைவருமாவார்.

இலட்சுமணபுரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எல்.எல்.பி., இறுதி ஆண்டு படிக்கும்போது பல்கலைக்கழக மாணவர்களால் காங்கிரஸ் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆக., 1942ல் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது மாணவர்கள் காங்கிரஸ் தலைவரான இவர் கைது செய்யப்பட்டு ஐந்து மாத பாதுகாப்புக் கைதியானார். இதனால் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் சோசலிஸ்ட் ஜெயபிராஷ் நாராயணனின் பேரன்பைப் பெற்றவர். பின்னர் அதுவே பிரஜா சோசலிஸ்ட் கட்சியானது. அதைத் திருவிதாங்கூரில் பிரபலமாக்கியவர்களில் முக்கியமான தலைவர் இவர்.

பி.சோ., கட்சி சார்பில் 1952ல் சட்ட மன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து '54, '57லும் வெற்றி பெற்றார். பட்டம் சர்க்கார் தமிழர்களை நசுக்க முற்பட்டது. தன்கட்சி ஆட்சியில் இக்கொடுமை நடப்பதைக் கண்டு கொதித்துப் பட்டத்தை எதிர்த்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்றார்.

பல தொழிற் சங்கங்களின் தலைவர். அவர்களுக்காகப் போராடி வெற்றியும் கண்டவர். 1957ல் தமிழகச் சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்துக்கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவராக இருந்துள்ளார்.

SSL Certificate