M .சுசீந்திரேசே பிள்ளை


M .சுசீந்திரேசே பிள்ளை

நாஞ்சில் நாடு தாலுகா புத்தேரியில் ' வலியவடு மருதக விலாசம் ' முத்துவேல் பிள்ளை, அகஸ்தீசுவரம் தாலுகா மைலாடி சேந்தன் புதூர் பெருமாப்பிள்ளை என்ற செல்லம்மை நாச்சியார் தம்பதினருக்கு 13 - 3 -1923 அன்று சுசீந்திரேசன் பிறந்தார். பிற்காலத்தில் அவர் 'சேந்தன் புதூர் செல்லப்பன்' என்றும் அழைக்கப்பட்டார்.

அவர் சிறு பருவத்தில் வடசேரில் உள்ள பள்ளியில் ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இந்திய சுகந்திர போராட்டம் தீவிரமடைந்திருநத நேரம், குமரி மாவட்டத்தில் போராட்டம் ஆர்ப்பாட்டம், மறியல் முதலியன நடப்பதோடு தெருவில் தேச பக்தர்கள் கதர் ஆடை, காந்திக் குல்லா அணிந்து தெருத் தெருவாக பாரதியார் பாடல்களை பாடிக்கொண்டு செல்வதைப் பார்த்த சிறுவன் சுசீந்திரேசனுக்கு தானும் அந்தக் கூட்டங்களில் இனைத்து செல்ல வேண்டும் எனற ஆர்வம் ஏற்பட்டது.

மேலும் இவரது தந்தை வழிப் பாட்டனர்ர்,சுசீந்திரேசே பிள்ளை அந்தக காலத்தில் சென்னை சென்று F A படித்தவர். காங்கிரஸ் மிகுந்த ஈடுபாடு உடையவர் . பெரும் நிலக்கிழார் . இவரோடு தியாகி சிவராஜ பிள்ளை செங்கோட்டை கரையாளர் ஆகியோர் படித்தனர் . இவரது பாட்டனர்ர் சுசீந்திரேசே பிள்ளை நாகர்கோயில் " நாஞ்சில் நேசன் " என்னும் பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தி வந்தார்.

இவரது உறவினரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை புத்தேரியில் வசித்து வந்ததனால் முக்கிய பிரமுகர்கள், சுகந்திரப் போராட்ட வீரர்களான, ப .ஜீவானந்தம் , சிவ. முத்துகருப்பபிள்ளை, சிறமடம் இளங்கோ, M. E .நாயுடு எனப் பல பெரியவர்கள் கவிமணியைச் சந்திக்க வந்தபோது அவர்களின் அறிமுகத்தால் சுசீந்திரேசனுக்கு பொது வாழ்விலும் சுகந்திரப் போராட்டத்திலும் ஈடுபாடு உணடானது.

படிக்கும் போதே போராட்டத்தில் கலந்து கொணடதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர் என்பதால் விடுவிக்கப் பட்டார்.

சுசீந்திரேசன் புத்தேரியில் இருந்து பள்ளி விடுமுறையின் போது தன் தாய்வழிப் பாட்டனர்ர் வீடடிறகு மைலாடி சேந்தன் புதூரூக்கு வருவார். அப்போது நெல்லையாண்டார் பிள்ளை, காந்திராமன் பிள்ளை , சந்தியாகு, செண்பகலிங்கம் ஆகியோர்களின் தொடர்பு ஏற்பட்டது.

1937 - ம் ஆண்டு மகாத்மா காந்தி கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்கள். அப்போது M E .நாயுடு, சிவன் பிள்ளை , காந்திராமன் இவர்களோடு சுசீந்திரேசனும் சென்றார் .காந்திராமன் சுசீந்திரேசனை காந்திஜியிடம் அறிமுகப்படுத்தினர். காந்திஜியை நேரில் பார்த்த சுசீந்திரேசனுக்கு அவரிடம் மிகுந்த பக்தியும் சுகந்திரப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடும் ஏற்பட்டது.

தந்தை காலமான பின்பு சுசீந்திரேசன் தன் தாயுடன் சேந்தன் புதூரில குடியேறினார். 1942 ல் மயிலாடியில் வாலிபர் சங்கம் தொடங்கினர்ர். 1943 ல் நாகர்கோயில் மத்திய வாலிபர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொணடு தலை மறைவானார்.

1945 ல் அட்வகேட் திரு . சங்கரம் பிள்ளையைத் தலைவராகவும் M . சுந்தரம், எஸ். சிவன்பிள்ளை ஆகியோரைக் கர்ரியதரிசியாகவும், பி.எஸ் . மணி,சிவ முத்து கருப்ப பிள்ளை, ஆர். கே. ராம், சுசீந்திரேசன் போன்றோரைக் கொண்ட நாகர்கோவில் டிவிசன் காங்கிரஸ் கமிட்டி செயல் பட்டு வந்தது.

இந்த நேரத்தில் மலையாளப் பகுதிகளில் ஒன்றான மலபாரில் மாகாண காங்கிரசினர் ஐக்கிய கேரள அமைப்பில் 'காசர் கோடு முதல் கன்னியா குமரி ' வரை கேரளம் எனத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதை எதிர்த்த P .S .மணி மாகாண காங்கிரசில் இருத்து விலகி, வைக்கம் வீரர் காந்தி ராமனைச் சந்தித்து 1945 ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரு. தமிழரியக்கம் ஆரம்பித்தார் . பின்பு திரு. தமிழரியக்கம், 'அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்' அதன் பிறகு திருவிதாங்கூர் தமிழ்நாடு எனவும் பெயர் மாற்றம் பெற்றது. இந்த வேளையில் சுசீந்திரேசன் சமஸ்தான காங்கிரசில் அதிருப்தி கொண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் சேர்ந்தார்.

1946 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ம.பொ.சிவஞானம் அவர்களின் கூட்டம் சுசீந்திரேசன் தலைமையில் நடை பெற்றது. மேலும் அதே ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முவர்ணக்கொடி பறக்கத் தடைவிதிக்கப் பட்டது. அதனை எதிர்த்து சுசீந்திரேச பிள்ளை,C .ஆறுமுகம, S . சிவன் பிள்ளை ,காந்திராமன், போன்றோர் கையில் முவர்ணக் கொடியுடன் சென்று தடையை மீறினர்.

1947 ல் திருவனந்த புரத்தில் நியூ தியேட்டரில் புதிய அரசியல் ஸ்தாபனம் அமைப்பதில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக்கு அழைப்பில்லாததை எதிர்த்து காந்திராமன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோரோடு சென்று எதிர்ப்புத் தெரிவித்தவர் சுசீந்திரேச பிள்ளை.

1947 ல் நேசமணி அவர்கள் தி.த .நா. காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் 1949 ல் கொச்சி திருவிதாங்கூரோடு இணைந்த போது கேரளத்தின் தமிழ்ப் பகுதிகளைத் தமிழ் நாட்டோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு போராட்டத்திட்டமிட்டது. இதனை அறிந்த மலையாள அரசு, நத்தானியேல், நேசமணி, ஆர். கே. ராம்,பி.எஸ். மணி,காந்திராமன் ஆகியோரை இரவில் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து போராட்டமும் போலிசாரின் அடக்கு முறையும் நடந்தது. இதில் சுசீந்திரேசன், சிதம்பரநாதன் நாடார், C .ஆறுமுகம நாடார், P .J .பொன்னையா, வேலாயுதம் போன்றோர் கைது செய்யப்பட்டனர்.

1950 -ல் தி.த .நா. காங்கிரசில் பிரச்சினைகள் ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்தது. தாணுலிங்கம் நாடார் ,P S மணி மற்றும் பலர் தாணுலிங்கம் நாடார் தலைமையிலும் T . S .ராமசாமி பிள்ளை , நேசமணி, ரசாக் மற்றும் பலர் நேசமணி தலைமையிலும் பிரிந்தனர். சுசீந்திரேசபிள்ளை நேசமணியோடு சேர்ந்தார். ப . ஜீவனாந்தம், ம .பொ.சி இருவரும் அனைவரையும் அழைத்து தனித் தனிப் பிரிவினராக இருத்தால் நமது இலட்சியமான தாய் தமிழகத்துடன் இணைவதில் பின்னடைவு ஏற்படும்.எனக்கூறி 1952 -ல் அனைவரும் நேசமணி தலைமையில் ஒன்று சேர்ந்தனர்.

1954 -ல் நீதி மன்றம் முன் மறியல் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, கன்னியாகுமரியிலிருந்து நடந்து வந்து மறியல் நடைபெற்றது. காந்திராமன்,சுசீந்திரேசன்,பகவதிப்பெருமாள் ஆகியோர் நீதி மன்ற மறியலுக்குப் புறப்பட்டபோது ஜீவனாந்தம், ம .பொ.சி, குஞ்சன் நாடார், தாணுலிங்கம் நாடார், சிவ முத்து கருப்ப பிள்ளை, P .S .மணி போன்றோர் மூன்று பேருக்கும் மாலையணிவித்து, வழியனுப்பினர்கள்.இன்று அந்த இடத்தில் காந்தி மண்டபம் உள்ளது.

மறியல் நடத்திய காந்தி ராமன்,சுசீந்திரேசன், பகவதிப் பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்றது. பல போராட்டங்களில் ஈடுபட்டு, பல முறை சிறை சென்றதாலும், குமரி மக்கள் அனைவருடனும் ஜாதி, மதம் , உயர்வு தாழ்வு இன்றி பழகி வந்தவர் சுசீந்திரேசன் பிள்ளை அவர்கள்,அதன் காரணமாக பல பெரும் தலைவர்களின் அறிமுகமும் ஆதரவும் பெற்றவர் சுசீந்திரேசபிள்ளை.

இவர் வீட்டிற்கு வந்து சென்ற பெரியவர்களில் ஜெயப் பிரகாஷ் நாராயணன்,வினோபாபாவே ஜீவா ,என் .எஸ் .கிருஷ்ணன், சதாவதானி செய்குத் தம்பி பாவலர், நேசமணி, பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர், மைத்துனர் சசிவர்ணத் தேவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கர்ம வீரர் காமராஜர் அவர்கள் ,சுசீந்திரேசன் அவர்களை அழைக்கும் போதெல்லாம் சுசீந்திரேசன் அவர்களுடைய தாத்தா வெளியிட்டு வந்த 'நாஞ்சில் நேசன் ' பத்திரிக்கை பெயராலேயே 'நாஞ்சில் நேசன் ' என்று அழைப்பார்கள் , நேசமணி அவர்கள் தம்பி நேசன் என்று அழைப்பார்கள்.

அரசு வழங்கிய ஓய்வூதியத்தை என் நாட்டிற்குச் செய்த தியாகத்திற்கு விலை வாங்க விருபவில்லை என மறுத்தார்.சிறை, போராட்டங்கள் என ஈடுபட்டதில் உடல் நலம் குன்றி 6-9-1990 அன்று காலமானார் .

SSL Certificate