கட்டிடக்கலை மேதை திரு. பி. ரத்தினசாமி

கட்டிடக்கலை மேதை திரு. பி. ரத்தினசாமி
    இன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் கம்பீரமாகத் நிமிர்ந்து நிற்கக்கூடிய அரசு கட்டிடங்களில் பழமையாகவும் ஆனால் முதன்மையாகவும் நின்று நகருக்கு அழகு செய்பவை ஒன்று சேது லட்சுமிபாய் மேல்நிலைப்பள்ளி அடுத்தது மாவட்ட நீதிமன்றம். 
    வருடங்கள் பல ஓடிவிட்டன. ஆனாலும் என்றும் சிரஞ்சீவியாய் நின்று நிலைக்கக்கூடிய உறுதிவாய்ந்தவை நாங்கள்!. என்று பறைசாற்றுகின்றன மேற்படி கட்டிடங்கள்! இவைகளைக் கட்டி முடித்த பெருமைக்குரியவர் யார்? பெருமைக்குரிய பாரம்பரிய மிக்க குடும்பத்தில் தோன்றிய பெருமாள்பிள்ளை அவர்களாவார். அப்பெருமகனாரின் நன்மக்கள் மூவரில் ஒருவரே ரத்தினசாமி
நாகர்கோவில் அருகே பீமநகரி என்ற ஒரு சிறிய கிராமத்தில் எஸ்.பெருமாள்பிள்ளை ஆனந்தம் தம்பதியாரின் மகனாக 1920 ஆம் ஆண்டு மே மாதம் தோன்றியவர் பி.ஆர்.எஸ் என்ற ரெத்தினசாமி அவர்க்ள. இவரோடு ஐந்து பெண் மக்களும் இரண்டு ஆண் மக்களும் உள்ளதில். ஆண் பிள்ளைகளில் இரண்டாவது மகனாகும் பி.ஆர்.எஸ். என்ற இரத்தின சுவாமியின் மூத்தவர் பி.எஸ். மணி. நாகர்கோவிலில் ஒரு சமூக சேவகரும் சுதந்திர போராட்ட வீரரும் தியாகியும் ஆவார். பி.ஆர்.எஸ் அவர்கள்.
தொடக்க கல்வி நாகர்கோவிலில் முடித்த பின் அந்த காலத்தில் ப்பிரி யுனிவர்சிட்டி படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். அந்த காலத்தில் தொடக்க கல்வியை முடிப்பதே ஒரு பெரிய விஷயமாக இருந்தது. ரத்தினசாமி கல்வி பயில்வதில் மிகவும் ஆர்முள்ளவராக விளங்கியதை அவரது தந்தை உணர்ந்து. மகன் ரத்தினசுவாமியை மேல் படிப்பிற்காக திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பொறியற் படிப்பு படித்தார். தன் மகன் ஒரு சிவில் பொறியாளர் ஆக வேண்டும் என்று பெருமாள்பிள்ளை நினைத்தார் அந்த காலக்கட்டத்தில் அவர் சிறிய ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலைகள் திருவனந்தபுரத்தில் செய்து வந்தார். திட்டமிட்டு அவர் தன் மகனின் படிப்பும் தன்னுடைய கட்டிட வேலைகளும் ஒன்று போல் செயல்படுவதற்காக அவர் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தார். 1940-ல் திருவனந்தபுரம் தம்பானுரில் அரிஸ்டோ சந்திப்பு அருகில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். திருவனந்தபுரத்தில் குடிபெயர்ந்து அங்கு வசிக்கத் தொடங்கி மகனின் மேல்கல்வி முடிந்து அத்துடன் சிறிய கட்டிட வேலைகளும் பொறுப்பெடுத்து நடத்தினார். அந்த சமயத்தில் சித்திரைத்திருநாள் மன்னர் அரண்மனையில் இருந்து நேரடியாக பேட்டையில் சேதுலஷ்மிபாய் பள்ளி கட்டுவதற்கு அனுமதி கிடைத்தது. மாமன்னர் அவர்களின் திருக்கரத்தால் முதன் முதலில் கிடைக்கப் பெற்ற கட்டிட ஆணை அது. இன்றைய பி.ஆர்.எஸ். இன் மாபெரும் வளர்ச்சிக்கு அதுவே அடித்தளமாக அமைந்தது. அன்றைய கால கட்டத்தில் அரண்மனையில் இருந்து கிடைத்த அனுமதியென்றால் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. அரண்மனை அங்கீகாரம் உள்ள பலவித கலைஞர்கள் வைத்தியர்கள் உண்டு அப்படி அங்கீகரிப்பட்டவர்களில் பெருமாள்பிள்ளை அவர்களும் ஒருவர் ஆனார். ரத்தினசாமி அவர்கள் கல்வி முடித்து அரசு வேலைக்கு செல்ல விரும்பவில்லை. அன்றைய கால கட்டத்தில் ஒரு அரசு வேலை கிடைப்பது மிகவும் எளிதான ஒன்று. என்றாலும் ஒரு அரசு ஊழியராகச் செயல்பட மகன் பி.ஆர்.எஸ். விரும்பவில்லை. தந்தையுடன் கட்டிட வேலைகளைச் செய்வதற்கும் அதில் சாதனை படைப்பதற்கும் அவர் விரும்பினார். தந்தையும் மகனுமாக சேர்ந்து கட்டிடங்கள் கட்டும் தொழில் தொடங்கினார்கள். அவ்வாறு இருவரும் சேர்ந்து பத்து வருட காலமாக தொழில் நடத்தி வந்த நேரத்தில் மகனின் திறமையை அறிந்த தந்தை மகனை தனியாக தொழில் செய்வதற்கு வலியுறுத்தினார். அவ்வாறு தனியாகக் கட்டுமான பணிகளை ரத்தினசாமி அவர்கள் தொடங்கினார். சிவில் பொறியியல் கல்வி கற்றது மட்டுமல்லாமல் தொழிலைப் பொறுத்து முழு அனுபவம் தந்தையிடமிருந்து கற்க முடிந்தது. எனவே வேலையைப் பற்றி முழுவதுமாக கற்றுத் தெரிந்த பின்புதான் அந்த வேலையைப் தொடங்குவார். 1961-ல் கேரளாவில் பட்டம் தாணுபிள்ளை முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தலைமை செயலகத்தின் தென்புறத்தில் ஒரு மாளிகையை கட்டினார். ஆகஸ்ட் 18-ம் நாள் முதல் மந்திரி அதை திறந்து வைத்தார். அந்த அரண்மனையைக் கண்ணுற்ற மன்னர் சித்திரைத் திருநாள் ரத்தினசாமி அவர்களின் திறமையை கட்டிட நேர்த்தியை மிகவும் ரசித்துப் பாராட்டினார். அத்துடன் பி.ஆர்.எஸ் என்ற மூன்று எழுத்தின் மேல் பிரமுகர்களுக்கும் பொது மக்களுக்கும் நம்பிக்கை வந்தது. எந்த வேலையாக இருந்தாலும் அதை பி.ஆர்.எஸ்.யிடம் ஒப்படைத்தால் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை அரசிற்கும் உண்டானது. அதன்பின் பல்வேறு வேலைகள் அவரிடம் குவிந்தன. கோவில்கள் கட்டிடங்கள் காலனிகள் மற்றும் பத்மநகர் கார்த்திகை திருநாள் தியேட்டர். கல்லூரி கேம்ப்ஸ் காரிய வட்டம் சென்னையிலுள்ள திருவிதாங்கூர் அரண்மனை புதுப்பித்தல் மற்றும் சிறிதும் பெறிதுமாய் பல கட்டிடங்கள் கட்டியுள்ளார்.
    நோயால் அவதிப்பட்டவர்களுக்காக ரத்தினசாமி அவர்கள் 1966-இல் திருவனந்தபுரம் கிள்ளிபாலத்தில் ஒரு ஏக்கர் இடம் வாங்கி மகளிருக்கும் குழந்தைகளுக்குமாக எழுபதைந்து (75)படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை நிறுவினார். அன்றைய ஆளுநர் பி.இராமசந்திரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. நாளடைவில் பி.ஆர்.எஸ்.மருத்துவமனையின் வளர்ச்சி பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இன்று அந்த மருத்துவமனை இருநூற்றி ஐம்பது படுக்கைகள் கொண்ட பலதரப்பட்ட நவீன வசதிகள் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையாக வளர்ந்து நற்பெயருடனும் புகழுடனும் செயல்பட்டு வருகிறது.
    ரத்தினசாமி அவர்களுக்கு 1945-இல் திருமணம் நடந்தது. மனைவி கிருஷ்ணம்மாள் சோந்த ஊர் ஆலப்புழை. தற்பொழுது நல்ல உடல் ஆரொக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். மூத்த மகள் அனந்தம் ஒரு மருத்துவர். இளைய மகள் இராஜேஸ்வரி மகன் முருகன்.
    1988-இல் கேரளா பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து செனட் மெம்பராக தேர்வு செய்யப்பட்டார்.
    அரிமா சங்கத்தில் அங்கமாக இருந்து அதன்பின் உதவி மாவட்ட கவர்னர் பதவி வரை வகித்த காலத்தில் நூறு ஏழை தம்பதிகளைத் தேர்வு செய்து. தனது சொந்த செலவில் திருமணம் நடத்தினார்.
    தன்னுடைய வாழ்க்கை தனக்கு மட்டும் தான் என்ற எண்ணம் பி.ஆர்.எஸ் இன் வாழ்க்கையில் ஒரு போதும் தொன்றியதில்லை. அவர் தன் வாழ்க்கையில் ஒரு பகுதியை அனாதைகள் ஏழைகள் போன்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆவல் எல்லா நிலையிலும் காணப்பட்டது. பணம் கொடுப்பது மட்டுமல்லாமல். அன்பும் ஆதரவும் எப்போதும் அவரிடம் இருந்து வந்தது. தமிழ் மற்றும் மலையாளம் கலந்த எல்லா இனமக்களொடும் அன்புணர்வொடும் இன்முகத்தொடும் பழகினார்.
    திருவனந்தபுரத்தில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்காக ஒரு தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சங்கத்திற்காக ரத்தினசுவாமி அவர்கள் கிள்ளிப்பாலத்தில் 12 சென்ட் இடம் அன்பளிப்பாக வழங்கினார். இன்று அந்த இடத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். அங்கு நிறுவப்பட்ட கட்டிடத்திற்கு இரத்தினசுவாமி ஆடிட்டோரியம் என்ற பெயர் சங்க உறுப்பினர்களால் சூட்டப்பட்டது.
    மனித நேயம் மிக்க பி.ஆர்.எஸ். அவர்கள் நோய்வாய்ப்பட்டார் செய்தி அறிந்து அவருடைய நண்பர்கள் நீங்கள் அமெரிக்காவுக்குச் சென்று சிகிட்சை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அதற்கு? நம்ம ஆஸ்பத்திரியிலிருப்பவர்களும் திறமையான மருத்துவர்கள் தான். ஆயுள் பலமிருந்தால் போதும் என்றார்.
    ரத்தினசாமி என்ற (பி.ஆர்.எஸ்) அந்த பெரிய மனிதர் 1990 மே-12ம் தேதி இவ்வுலகத்தை விட்டு மறைந்தார். அப்பொன்மகன் உடல்கண்டு பொதுமக்கள் கண் கலங்கினார்கள். மிக பெரிய மக்கள் வெள்ளம் கண்ணீர் கடலில் மிதந்தவாறு அவரின் அவரின் கடைசி யாத்திரையில் பங்கு கொண்டது. பி.ஆர்.எஸ் மருத்துவ மனையின் முன்பு திருவனந்தபுரம் சாலையில் இரண்டு மைல் தூரத்துக்கு மக்கள் வெள்ளம் சோகக் கண்ணீர் வடித்தவாறு திரண்டு நின்றது. போக்குவரத்து மாற்று வழியில் திரும்பிவிடப்பட்டது. கேரளா முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அஞ்சலி செலுத்தினர். அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டுப்போர்வை அவரின் பூத உடலில் பொருத்தப்பட்டது. இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
    சிட்டி கார்ப்பரேஷன் சாஸ்தாங்கோவில் மியுசிக் அகாடமி என்ற பெயரிலிருந்த சாலைக்கு பி.ஆர்.எஸ் சாலை என்று பெயர் சூட்டப்பட்டது.
   

SSL Certificate