Dr. S. VARADHARAJAN
Dr.S.Varadharajan. B.E.(Chem), A.M.I.I.C.H.E.,M.I.S.T.E.,A.M.I.E.,
M.I.C.,F.I.C.S.,Ph.D,


அமரர். விளாங்காடு.N. சோமசுந்தரம் பிள்ளை - சிறைமடம் புதுவீடு செல்லம்மாள் தம்பதியர்களின் மகன் டாக்டர்.S. வரதராஜன் அவர்கள், ஆகஸ்ட்1964-ல், வேதியல் தொழில்நுட்ப பயிலகதிதில் ( Instituteof Chemical Technology,Chennai-600113), ஆசிரியராக தன் கல்விப் பணியைத் தொடங்கி, படிப்படியாக பதவி உயர்வுப் பெற்றுத் துறைத்தலைவராக, முதல்வராக, தொழில்நுட்பக் கல்வி இணை இயக்குநராக, கூடுதல் இயக்குநராக, இயக்குநராக பதவி வகித்து ஒய்வு பெற்றவர்.


                  

அமரர் டாக்டர். எம்.ஜி.ஆர் அவர்கள், திரு.வரதராஜன் அவர்களுக்கு கலைவாணர் N.S.  கிருஷ்ணன் அவர்களின் மூத்த புதல்வி வடிவாம்பாள் அவர்களை சென்னையிலுள்ள "ஆபட்ஸ்பா" திருமண மண்டபத்தில், மிகச் சிறப்பாக  26/04/1964 -ல் சித்திரை முழு நிலாவன்று - திருமணம் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக ( Director of Technical Education ) பதவி வகித்த காலகட்டத்தில்தான் மாணவர்களின் நலம் கருதி, பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வு,( Common Entrance Examination ) பளஸ் 2 தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்பே நடத்தும் திட்டத்தை அரசுக்கு பரிந்துரைத்து செயல்படுத்தினார்.

கனடா - இந்தியா தொழில்நுட்பப் பயிலக ஒத்துழைப்புத் திட்டட்த்தின்(CIICP) கீழ், தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த, இவர் மூன்று மாதம் கனடாவில் பல கல்லூரிகளை பார்வையிட்டார். உலக வங்கியின்( world Bank) உதவியுடன் தொழில் நுட்பக் கல்வியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். இந்திய அரசின் நல்லெண்ண குழு உறுப்பினராக ஈராக் சென்றுள்ளார். மேலும் கல்லூகளின் செயல்பாடுகளை பார்வையிட சீனா சென்றுள்ளார்.


நாஞ்சில் வெள்ளாளர் சமுதாயத்திற்கென்று ஒரு தொழில் நுட்பப் பயிலகம் (Polytechnic) தொடங்கவேண்டுமென்ற திரு.வரதராஜன் அவர்கள் ஆசையின் வெளிப்பாடுதான் - கலைவாணர் N.S.K. தொழில்நுட்ப பயிலகக் கல்லூரியின்
தோற்றம். இது தொடர்பாக அமரர். சொக்கலிங்கம் பிள்ளை அவர்களிடம் பல தடவை பேசியுள்ளார். நம் இன மக்களிடம் பங்குகளாக மூலதனத்தை சேமித்தால், அதற்கான அனுமதியை அரசிடமிருந்து வாங்க உதவுவதாக சொன்னார். அமரர்.எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபொழுது, 1984 பெப்ரவரி 12-ஆம் தேதி திரு.வரதராஜன் அவர்களின் புதுமனை புகுவிழாவில் கலந்துகொள்ள வந்திருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கல்லூரி நிறுவுவதற்கான ஆணையை, அமரர். திரு.சொக்கலிங்கம் தலைமையில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் பெற்றுக்கொடுத்தார்.
அமரர்.திரு.சொக்கலிங்கம்,அமரர்.ராமநாதபிள்ளை,திரு.அனந்தகிருஷ்ணன பிள்ளை போன்ற பலரின் அரும்பணியால் அந்த கல்லூரி நிறுவப்பட்டது. அன்றைய காலகட்டத்தில், வெள்ளாள இன மக்களை ஒன்று சேர்ப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவும் அவர்களிடமிருந்து பங்குகள் வாங்கி ஒரு அமைப்பை உருவாக்குவது கடினமானது. அந்த பெரும் சாதனையை அமரர்.திரு.சொக்கலிங்கம் பிள்ளையைத் தவிர யாராலும் செய்யமுடியாது என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது. அந்தக் கல்லூரிதான் வெள்ளாள இன மக்களால் உருவாக்கப்பட்ட முதல் கல்லூரி.
                                                     
Dr.S.வரதராஜன் - திருமதி. வடிவாம்பாள் தம்பதியர்களுக்கு மூன்று பெண்கள்,
மூவரும் திருமணமாகி, அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மூத்தவள்,Dr.சத்தியா நடராஜன் M.D. (USA)  (அமரர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.அவர்கள்தான், தன் தாயின் பெயரான"சத்தியா" என்ற் பெயரை சூட்டினார்கள்). அமெரிக்காவில், Los Angeles-ல் Kaiser Permanente Medical Centre  என்ற மருத்துவமனையில், Pathology Department-ல் உயர் பதவியிலுள்ளார். உலகப் பிரசித்திப் பெற்ற மருத்துவ இதழ்களில், பல மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். சிறந்த மேடை பேச்சாளர். அவர்களுக்கு நடாஷா (Natasha) என்ற மகளும், சியான் விஜய் ( Sean Vijay) என்ற மகனும் இருக்கிறார்கள். மகள், நடாஷா, தான் படித்த பள்ளியில் மாணவர்கள் தலைவராக (Students President ) தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர். மேலும் அன்றைய அமெரிக்க குடியரசு தலைவர், Mr.Bush அவர்களிடமிருந்து “Outstanding Student”   என்ற நற்சான்றிதழ் பெற்றுள்ளார். பல பேச்சுப் போட்டிகளில் கலந்து பரிசுகள் வாங்கியுள்ளார்.  UNO sponsored program-ல்  பேச்சுப்போட்டியில் பரிசு பெற்றுள்ளார் இரண்டாவது மகள், திருமதி. வித்யா கண்ணன், M.S (USA),, ஆரஞ்ச் கவுண்டியில் ( Orange Ct, California, USA) தனியார் நிறுவனத்தில் உயர் பதவில் இருக்கிறார். அவர் கணவர். திரு. கண்ணன், M.Tech (IIT, Karagpur), software Consultant  -ஆக பணிபுகிறார். இவர் M.Tech-ல் தங்கப் பதக்கம் (Gold Medal ) வாங்கியுள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் (Nathan), ஒரு மகளும் (Nina) (இரட்டையர்கள்) இருக்கிறார்கள். இருவரும் வகுப்பில் முதல் மாணவர்கள் என்ற சான்றிதழ்கள் பெற்றவர்கள். மூன்றாவது மகள், திருமதி. மீனா ஸ்ரீதர், M.S.(CSE), M.S.(IT),  MBA (USA),  Buffalo--ல்     CITI global Markets Inc-ல் Assistant Vice-President-ஆக பணிபுகிறார். அவர் கணவர்.Dr.ஸ்ரீதர்,M.D, (USA), MRCP (UK), Fellow, Cardiologist, Buffalo, USA -ல் பணிபுரிகிறார். இவர் MBBS-ல்  தங்கப் பதக்கம் (Gold Medal ) வாங்கியுள்ளார். இவர்களுக்கு நிஷா (Nisha) என்ற மகளும், அஜய் (Ajay) என்ற மகனும் இருக்கிறார்கள். நிஷா அமொக்கா குடியரசு தலைவர், Mr. Barrack Obama   அவர்களிடமிருந்து “Outstanding Student "  என்ற நற்சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும்  Gifted Maths Program at University of Buffalo test-ல் தேர்ச்சி பெற்றுள்ளார்.


Dr.S.வரதராஜன், B.E(Chem)., A.M.I.I.Ch.E., M.I.S.T.E., M.I.S.E., A.M.I.E.,M.L.C.,F.I.C.S., Ph.D.(USA), அவர்கள் பல பொறியியல் கல்லூரிகளுக்கு கவுரவ ஆலோசராகவும்,  Consortium of Self financing Professional, Arts & Science Colleges in Tamilnadu-ல்  -Co-ordinator ஆகவும் பணிபுகிறார்.  மேலும்  தன் தாய் தந்தையர்கள் நினைவாக, சிறைமடத்தில் " சோமசுந்தரம் பிள்ளை-புதுவீடு செல்லம்மாள் நினைவுகூடம்" என்ற மண்டபத்தை கட்டி அம்மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இவருடைய
மகள்கள், சத்யா,வித்யா,மீனா. தங்கள் தாத்தா நினைவாக இறைத்தகுளத்திலுள்ள வெள்ளாளர் கல்யாணமண்டபத்தின் முன் ஒரு பிள்ளையார் கோவில் கட்டியுள்ளார்கள். நம் இன மக்கள் ஒற்றுமையாக எல்லோருடைய திறமைகளையும் ஒன்றிணைந்து செயல்பட்டால், பல சாதனைகளை செய்யலாம் என்ற கருத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்.
 
SSL Certificate