திரு .கோ .முத்துகருப்பன்

பெயர்:                           கோ. முத்துக்கருப்பன்
பிறப்பு:                            19-08-1939
கல்வி:                           எம். ஏ
தந்தை:                          என். எஸ். கோலப்ப பிள்ளை
தாயார்:                           லெட்சுமி அம்மாள்
மனைவி:                         எல். ஜானகியம்மை
                                   (பணிநிறை ஆசிரியை)
மகன்:                           எம். ஸ்ரீகோலப்பன்  D.M.E.,
                               எம். ஸ்ரீலெட்சுமிகாந்த்  D.M.E.,
மகள்:                        எம். ஸ்ரீஅனந்தகிருஷ்ணவேணி. M.B.A.,


பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் மாநில பொறுப்புக்குழு உறுப்பினரான இவர்  தனது 12 வது வயதிலேயே தேசியத்தில் ஈடுபட்டு காங்கிரஸ்பேரியக்கத்தில தன்னை இணைத்துக்கொண்டு  பல பதவிப்பொறுப்புகளை வகித்தவர்.  திருகொச்சிசமஸ்தானதில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்தோடு இணையவேண்டிய போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அதற்காக சிறை சென்றவர். அதற்காக தமிழக அரசு இவருக்கு எல்லைக்காவலருக்கான  தியாகி என கௌரவத்தை அளித்துள்ளது.

1977 ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். குமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான அருள்மிகு நாகராஜா திருக்கோவில் பக்தர்கள் சங்க தலைவராக இருந்துள்ளார்.  இத்திருக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவை மிகச்சிறப்பாக நடத்தும் குழுவில் இவருடைய பங்கு அலாதியானது.

       தமிழக அரசு கன்னியாகுமரிமாவட்டத்தில் இயங்கி வந்த அரசுப்போக்குவரத்துக்கழகத்திற்கு பொதுவுடமை வீரர் ஜீவா பெயர் வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் இவரும் ஒருவர்.


  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தேசியப் பேரவை கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் மன்றம். பன்னாட்டதமிழுறவு மன்றத் தலைவராகவும் குமரிமாவட்ட தமிழ்நல எழுத்தாளர் சங்கம்.  மூத்தகுடிமக்கள் மற்றும் பென்சனர்சங்கத் துணைத்தலைவராகவும் எஸ்.எல்.பி அரசு மேநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்சங்ககௌரவ தலைவர் தமிழ்நாடு அன்பர்கழக இயக்குநர்.  நாகர்கோவில் ஊர் வெள்ளாளர் சமுதாய தலைவராகவும் இருந்து வருகிறார்

தற்போது பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின்  மாநிலப்பொறுப்புக்குழு உறுப்பினராக நமது சமுதாயத்தவர்களின் நலன் ஒன்றையே கருத்தாகக் கொண்டு அதற்காக 2006 முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு தீவிரமாக செயல்பட்டுவரும்  72 வயதான ஒரு சுறுசுறுப்பான மனிதத்தேனியாக வாழும் தியாகி விருது பெற்ற இளைஞர் நாமும்  இவரை நமது வாழ்வின் முன்னுதாரனமாக கொள்ளலாமே!


SSL Certificate