திரு . S . தாணுமூர்த்தி

பெயர்:         எஸ். தாணுமூர்த்தி
பிறப்பு:         22-05-1974
பிறப்பிடம்:      புதப்பாண்டி
தந்தையார்:     ஆர். சண்முகவேல்
            ( பணிநிறை மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாளர்)
தாயார்:        இ. மீனாட்சி
            (புதப்பாண்டி கணேசபிள்ளை மகள்)
மனைவி:      எஸ்.பி. சுபா
            ( ஆசியை   கரோல் மெட்ரிக்குலெசன் மேநிலைப்பள்ளி)
மகள்  :     T.S. மீனாஷிவானி


பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட  செயலராக தொண்டாற்றும் இவர் தனது பள்ளிப்படிப்பை  குறத்தியறை கொட்டாரம் செண்பகராமன்புதூர் வடசேரி ஆரல்வாய்மொழி ஆகிய பள்ளிகளில் முடித்தார். அதன் பின்னர்   ஒவியஆசிரியருக்கான பயிற்சி   தொழிற்பயிற்சி  ஆகியவற்றை  முடித்தவர்.    பல்தொழிற் பயிற்சியாளரான இவர்   வரலாற்றில்  முதுகலை பட்டம் பெற்றவர்.

     இவர்  இயற்கைக் காட்சிகள்  மற்றும் கடவுளர்களின் திரு உருவப்படங்கள்  ஆகியவற்றை தத்ரூபமாக வரையும் திறமை பெற்றவராவார்.
சமூகத்தில் இளைஞர்கள்  அனைவரும் கல்வி அறிவு பெற்வர்களாகவும்    தொழிற்பயிற்சி பெற்று தனது வாழ்கையையும் தனது குடும்பத்தையும் காக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்  என்ன சீரிய சிந்தனை கொண்டவர்.

அதனுடைய உந்துதலால்    தொழிற்பயிற்சி பள்ளி  (ஐ.டி.ஐ)  துவக்கி குறைந்த கட்டணத்தில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கிறார். இந்த பள்ளியின் தாளாளரராகவும் இருக்கிறார். இவரது ஐ.டி.ஐ யில்  வருடம் தோறும்  3  பேருக்கு இலவச பயிற்சி அளிக்கும் சேவையை மேற்கொண்டு வருகிறார.   பயிற்சி முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார். இவரால்   பயிற்சி பெற்று  அயல்நாடுகளிலும்  நம்நாட்டிலும் ஏராளம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல.
       2003  ல் தன்னை பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தில்  தன்னை இணைத்துக்கொண்டு மாவட்ட செயலாளர் பொறுப்பில் பயணிக்கிறார். இவர் நமது சமுதாயத்தவரை ஒருங்கிணைக்கும் பணியில் மாநிலப்பொதுச்செயலாளர் மற்றுமுள்ள நிர்வாகிகளுடன்   நம்மவர்கள் வாழும் ஒவ்வொரு ஊர்களுக்கும் நடந்தே சென்று நம்மவர்களை ஒருங்கிணைத்து உறுப்பினராக்கியவர்.  இவரால் சங்கம் பல உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதிர்ந்து பேசாத நல்ல குணமும்  பிறருக்கு உதவ வேண்ட