திரு . எஸ். பெருமாள் பிள்ளை
.
பெயர்:     எஸ். பெருமாள் பிள்ளை
தாயார்:     திருமதி G. இராமலெட்சுமி  (புத்தேரி)
தந்தையார்:  திரு.P சிவசுப்பிரமணியபிள்ளை  (காக்குமூர்)
பிறப்பிடம்:  சுசீந்திரத்தை அடுத்துள்ள  காக்குமூர்
மனைவி:   திருமதி. R. தாணம்மை  ( காட்டுப்புதூர்)
மக்கள்:    திருமதி இராமலெட்சுமி நாகராஜன்.  B.A.,
         திரு.பெ.சிவசுப்பிரமணியபிள்ளை B.E., கல்பாக்கம் அனுமின்
           நிலையத்தில் அறிவியல் அலுவலராக பணிபுரிகிறார் மனைவி
           திருமதி கோகிலா
         திருமதி. இராஜம்மாள்முத்து.   B.Sc.,


பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவரான இவர்  38 ஆண்டுகள்  தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.  பணியில்இருந்தாலும் நாட்டின் உயர்நாடியான நமது குலத்தொழிலான  விவசாயத்தைக் கண்ணாக கருதும் கிராமிய மணம் கொண்டவர். எனவே தான்  14 ஆண்டுகளாக விவசாயச்சங்கத்தின் பல்வேறு பொறுப்புளை வகித்து அந்த சங்கத்திற்கு அலங்காரம் கொடுத்தவர். தற்போது அதன் பொருளாளராக தொடருகிறார்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் தன்னை இணைத்துக்கொண்டு அதிலும் பல பொறுப்புகளை வகித்தவர்.  தனது அரசுப் பணிகாலத்தில் அரசின் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச்செல்வதற்காக கூட்டங்கள் கிராமியகலைகள் வில்லுப்பாட்டு  நாடகங்கள் ஆகியவற்றின் மூலம் கிராமங்களுக்கு எடுத்துச்சென்று மக்கள் மத்தியில் அந்த திட்டங்கள் நீங்கா இடம் பெற பணிபுரிந்தவர். எந்த செயலிலும் துடிப்பாகவும் திறமையாகவும் செயல்படும் பண்பாளர்.

விவசாய நிலங்கள் குடியிருப்பு மனையாக மாறாமல் இருக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையில் அதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்களை தற்போது நடத்திவரும் ஒரு தேசியவாதி. தான் மருத்துவத்துறையில் பணிபுரிந்த காரணத்தால் தினம் தோறும்  சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் நோயாளிகளுக்கு  உயரிய சிகிட்சை தேவைப்பட்டால் மருத்துவ துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி நோயாளிகளுக்கு இன்றும் உதவிவருகிறார். இவரது இல்லத்திற்கு யார் எப்போது சென்றாலும் உணவருந்தச்செய்துதான் அவர்களை வழியனுப்புவார். இவரது இந்த செயலுக்கு இவரது மனைவிதான் மூலகாரணம். இவரது மனைவியின்  ஒத்துழைப்பால் இவரது சாதனைகள் தொடருகிறது. வெள்ளாளர் சமுதாயத்தைச் சார்ந்த எவர் எந்த உதவியைக் கேட்டாலும் மறுக்காமல் தன்னால் இயன்ற வரையில் செய்யும் பண்பாளர்.

பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கம் நமது சமுதாயத்தவரின் நலன் வேண்டி போராடும் போதெல்லாம் தனது உடலை வருத்தி அதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் ஆற்றல் கொண்டவர். எந்த நேரமும் சமுதாயச்சிந்தனையோடு  பணிபுரிபவர். எந்த நேரமும் உழைப்பு உழைப்பு என்பது தான் இவரது தாரக மந்திரம்.

பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவரான இந்த  63 வயது இளைஞரின் பாதையை  உழைக்கத்துடிக்கும் அனைவரும் பின்பற்றி பார்க்கலாமே.  

SSL Certificate