திரு . சி. இராமன்பிள்ளை

பெயர்:    சி. இராமன்பிள்ளை
          பணிநிறை ஆசிரியர்
தந்தையார் பெயர்:  சிதம்பரக்குமாரபிள்ளை
தாயார் பெயர்:  பாக்கியலெட்சுமி
பிறப்பு    :  13-02-1938    
பிறப்பிடம்:   இரவிபுதூர்
மனைவி:   எம். சடையம்மாள்
மக்கள் :  ஆர். பாக்கிய லெட்சுமி   M.Sc. B.Ed.,.  ( ஆசிரியை)
        ஆர். சிதம்பரக்குமார்     M.Sc. B.Ed.,  (தொழிலதிபர்)
        ஆர். மீனாகுமாரி  ஐயப்பன்.  B.Com.,
        ஆர். சங்கரசெல்வி    M.Com.,

பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின்  மாவட்ட பொருளாளரான இவர் தனது சிறுவயது முதல்  ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர் .  32  ஆண்டுகள் ஆசிரியப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தனது பணிக்காலத்தில் கல்வியில் மாணவர்களை  சிறப்படையச்செய்த  மிகச்சிறந்த கல்வியாளர். இவரிடம்  பயின்ற  மாணாக்கர்கள் பலர் இன்று அரசின் உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.

சமூகத்தொண்டாற்றும்  சிறந்த  காங்கிரஸ்காரர்.   காங்கிரஸ் கட்சியில் ஒன்றிய பொருளாளர் பதவியில் இருப்பவர்.   தான் பயின்ற அரசுப் பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப்பள்ளியாக  மாற்றுவதற்காக அரும்பாடு பட்டவர் இரவிபுதூர் நமது சமுதாயத்தவர்களை ஒன்றிணைத்து அவர்களின் பேராதரவுடன் உயர்நிலைப்பள்ளியாக  1971 ல் தரம் உயரச்செய்த பண்பாளர்.

விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1996 ல் நாஞ்சில் நலச்சங்கம் என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பல விவசாயப்பணிகளை செய்தவர்.   இந்த சங்கத்தின் மூலம் இரவிபுதூர் ஊராட்சியை தனி ஊராட்சியாக மாற்றுவதற்கு அரும்பாடு பட்டவர். இந்த ஊராட்சியின் பெரும்பகுதிகள் நமது சமுதாயத்தவர்கள் வாழும் பகுதிகளாக இருக்கிறது. எத்தனையோ முறைகள் தனக்கு  ஊராட்சித்தலைவர் பதவி  தன்னை தேடிவந்தபோதும் அதை வேண்டாம் என்று விட்டவர். எப்பொழுதும் எந்த நிலையிலும் உண்மைபேசும் பண்பாளர். உண்மை இவரை உயர்ந்த  இடத்தில் வைத்திருக்கிறது.


அரசு சார்ந்த விவசாய சங்கம் அமைத்து அந்த சங்கத்தின் மூலம் பல பயனுள்ள  செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னோடியாக இருந்தவர்.

இரவிபுதூர் விவசாய கூட்டுறவு சங்கத்திற்கென்று தனியாக கட்டடம் கட்ட வேண்டிய வந்தபோது அதற்காக பாடுபட்டவர். இவரது உழைப்பால் இரவிபுதூர் கூட்டுறவுசங்க கட்டிடம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.

 நல்ல ஆக்கபுர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளும்  எந்த ஒரு அமைப்பானாலும் வலியச்சென்று தன்னால் ஆன உதவிகளை செய்யும் பண்பாளர். தனது பணிநிறைவிற்குப் பின்னால் இன்று வரையிலும் இரவிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியின்  பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பில் தொடருகிறார். பள்ளி மற்றும் மாணவர்கள் வளர்ச்சியில் மிகுந்த அக்கரை கொண்டவர்.  கல்வியில்  உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தனது சொந்த நிதியில் பரிசுளை இன்றும் அளித்துக்கொண்டிருக்கிறார்.  

இரவிபுதூரில் அமைந்துள்ள இரவிவிநாயகர் திருக்கோவிலில் புஜாகாலங்கள் மிகச்சிறப்பாக நடைபெற தன்னால் இயன்ற பணியை செய்துவரும் இறையருளாளர். இங்கு ஆன்மீக உரைகளையும்  யோகா போன்ற உடல்நலன்காக்கும்  பயிற்சிகளையும் நடத்துவதற்கு உறுதுணையாக இருப்பவர்

விருந்தோம்புதலில் மிகச்சிறந்த பண்பாளர். தனது வீட்டிற்கு வருவோரை வரவேற்று விருந்தோம்பி அனுப்பும் பாங்கு கொண்டவர். இதற்கு இவருடைய மனைவி மிகமிக உறுதுணையாக இருப்பது மிகவும் போற்றுதலுக்குரியதாகும்.  எந்த நிலையிலும் நிதானத்தோடு செயல்படும் பண்பாளர்.

ஷபாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் வளர்ச்சிக்காக பல வழிகளிலும் தன்னை அர்ப்பணித்து நமது சமுதாயம் எந்த வகையிலாவது  நமது சந்ததிகள் பலன் பெறும் வகையில் அரசின் சலுகைகளை பெற்றாக வேண்டும் என்ற உறுதியான  எண்ணம் கொண்டவர். அதை சாதிக்க என்னால் ஆன அனைத்து பொருளுதவியையும் செய்ய தயாராக இருக்கும்  சமுதாயஎண்ணம் கொண்ட சமுதாய ஆர்வலர். இந்த  73 வயதான இளமைதுடிப்புள்ள முதியஇளைஞரின் பாதையில் நாமும் பயணிக்க முயலலாமே.

SSL Certificate