Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
About Nanjil Vellalar
சற்று சிந்தியிங்கள் !!Back to List

 சற்று சிந்தியிங்கள் !!


பிற சாதி  சான்றிதழ்  பெற்று உள்ள நமது மக்கள் , அச்சலுகைகளை  அனுபவித்து கொண்டு , சங்க நிர்வாகிகளாக பொறுப்பு வகித்து கொண்டு, ஹிந்து வெள்ளாளர் என அரசினால் குறிப்பிடப்படும் நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாக போலி (அ) நீலி கண்ணீர் வடித்து கொண்டு இருப்பது ஏன் ??

தயவுசெய்து , அவர்களை  சங்க பொறுப்புகளில் இருந்து விலக்கி , தனி மனித பாதுகாப்பிற்காக மட்டும்  உறுப்பினராக  இருக்க அனுமதியுங்கள் .

சங்க நிர்வாக பொறுப்பு , அவர்களுக்கு அளிக்க கூடாது என்பதில் தீர்மானமாக இருங்கள் .

 நமது சமுதாய சங்க நிர்வாகிகள் அனைவரின் வாரிசுகளின் சாதி  சான்றிதழ்  ஹிந்து வெள்ளாளர் ( FC or OC ) என உள்ளதா ? என்பதை அறிந்து , அதன் பின் சங்க பொறுப்புகளை அளிக்கவும் .

நாஞ்சில் வெள்ளாளர் இணையதள குழுமம் நடத்திய ஆய்வில் , இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது .

வேறு எந்த சாதி அமைப்பிலும் , வேறு சாதி சான்றிதழ்  பெற்றவர்கள் சங்க நிர்வாகிகளாக பொறுப்பில் இல்லை . நம் சங்கங்களில் அதிக அளவில் உள்ளார்கள் .

 நாம் எந்தந்த சங்கங்களை, மலை போல் நம்பி , நம்மை பிற்படுத்தோர் பட்டியலில் இணைக்கவும் - அரசினால் சாதி பிரிவுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் நமக்கு கிடைக்கவும் கனவு காண்கிறோமோ ,அவைகள் இம் மாற்றங்கள் வந்தால் மட்டுமே   நனவாக சாத்தியம் உள்ளது .

 2013 வரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கவும் - அரசினால் சாதி பிரிவுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் நமக்கு கிடைக்கவும் மத்திய - மாநில அரசோடு ,சங்கங்கள்  நடத்திய கடிததொடர்புகள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு கடிதம் என்ற வகையிலும் , அக்கடிதமும் , அரசு ஒப்பு கொள்ளும்படியான ஆவணங்கள் இல்லாமல் , யாருக்காக என்ன கேட்கிறோம் என்பதை உணராமல் தயாரிக்கப்பட்ட  கடிதமாக உள்ளதையும் அறியும்போது ,கண்ணுக்கு எட்டிய தொலைவில், சமுதாய விடிவு பிறக்கும் வெளிச்சம் தெரியவில்லை.

அரசே பார்த்து ஏதேனும் சலுகைகளை செய்தாலோ  அல்லது சங்கங்களில் உறுப்பினராக உள்ள அறிவார்ந்த சான்றோர்கள்  தட்டி கேட்டு திருந்தினால் மட்டுமே, நம் சமுதாய மக்கள் அனைவரும் முன்னேறும் பாக்கியம் கிடைக்கும்.

மற்றபடி எப்போதும்போல் தனி நபர் முயற்சியே அவரவர்களுக்கு வெற்றியை தரும்.

 இறைவன் நம் சமுதாய மக்களோடு துணை நிற்க வேண்டுவோம் !