Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
About Nanjil Vellalar
மக்கள் தொகை கணக்கெடுப்புBack to List
பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் அறிக்கை :

பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எம். சண்முகம் பிள்ளையும், மாவட்ட தலைவர் பெருமாள்பிள்ளையும் கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசு தொடங்கியுள்ளது. வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, நமது வெள்ளாளர் சமுதாய உறவினர்கள் அனைவரும் கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் அனைத்து விவரங்களுக்கும் தவறாது பதில் அளிக்கவேண்டும் எனவும் அவர்கள் கேட்கும் இனம் என்ற கேள்விக்கு "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்" என்று பதில் அளிக்க வேண்டும் எனவும், இதுபோல் மற்ற மாவட்டங்களில் வாழும் நமது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த உறவினர்கள் அனைவரும் "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்" என பதிவு செய்ய வேண்டும் எனவும், கணக்கெடுப்பின் போது அதிகாரி தவறுதலாக தங்கள் இல்லங்களுக்கு வரவில்லையானால், நீங்கள் வலியச்சென்று அந்த அதிகாரியை அழைத்துவந்து அவரிடம் விவரம் அளிக்கவேண்டும்.

இந்த பதிவுகள் நமது சமுதாயத்திற்கு பல வழிகளிலும் நல்ல பலனைப் பெற்றுத்தரும். எனவே இந்த கணக்கெடுப்பில் தவறாது நமது உறவினர்கள் அனைவரும் தங்களது கடமையைச் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.