Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
நாஞ்சில் சாய். D . சுப்ரமணியம் - சென்னைBack to List
அன்பு சொந்தங்களே ,

நாம் ஒவ்வொருவரும் இன்றைய சூழலில் நமது சமுதாயத்தின் நிலை , நமது நிலை, நமது குழந்தைகளின் நிலை, நம் சந்ததியின் எதிர்காலம் இவைபற்றி எல்லாம் தீவிரமாக சிந்தித்து , மேற்கொண்டு என்ன செய்வது என்று முடிவு எடுக்க வேண்டிய கால கட்டத்தின் , கட்டாயத்தில் இருக்கிறோம் .இந்த கால கட்டத்தையும் தவற விட்டோம் என்றால் நமது நாஞ்சில் வெள்ளாளர்  இனம் என்ற ஒன்று இருந்ததாக வெறும் தகவல்கள் மட்டுமே நிலைத்து நிற்கும். .நம் சந்ததியினர் , இனத்தவர் அனைவரும் ஊர்களை விட்டு வெளியேறி மற்ற இடங்களில் சென்று குடியேறி தன் இன அடையாளமின்றி தாழ்ந்து போவார்கள் .

நமது பிள்ளைகள் , கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சாதியை காரணம் காட்டி பிற்படுத்தபடுக்கிறார்கள். அல்லது ஒதுக்கப் படுகிறார்கள் .

இருக்கின்ற கொஞ்ச நிலத்திலும் நமது குடும்பத் தொழிலான விவசாயத்தை செய்வதிலும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது .

தற்போது ஒருசில குடும்பங்கள் நினைப்பதுபோல் " நமது பிள்ளைகள் வேலைக்கு போய் விட்டார்கள் , திருமணம் ஆகி விட்டது , நமக்கென்ன !" என்று எண்ணி ஒதுங்கி இருப்பீ ர்களானால், அது நமது சமுதாயத்திற்கு உங்கள் சந்ததியினருக்கு இழைக்கும் மாபெரும் தவறு .

ஒரு காலகட்டத்தில், நம் இனத்தை சார்ந்த சிலரால், நம் இனம் பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய வாய்ப்பு நழுவி போனது . காலங்கள் மாற, நம் இனம் சிதிலமடைந்து வருகிறது. அதுபோன்று இப்போது வாய்மூடி மெளனமாக இருந்தால் , எதையும் சாதித்து விட முடியாது . நடப்பது மக்கள் ஆட்சி .ஆட்சியாளர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் . நமது உரிமையை , நமது பங்கை கேட்டு பெற வேண்டியது , நமது கடமை .

நாம் செய்ய வேண்டியதெல்லாம் " ஒற்றுமையாக இருப்பது , சமுதாயத்திற்கு உழைக்க முன் வருபவர்களை ஊக்குவிப்பது , அவர்களுக்கு முடிந்த அளவில் உதவுவது ,

என் சமுதாயம் முன்னேற என்னால் ஆனவற்றை செய்வேன் !

என் சமுதாயம் முன்னேற உழைப்பவர்களுக்கு உறுதுணையாய் இருப்பேன் !.

என் சமுதாயம் ஒற்றுமையாக செயல்பட அனைத்தும் செய்வேன் "

என உறுதி கூறி ஒருங்கிணைந்து செயல்பட அனைவரையும் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன் .

நன்றி ! வணக்கம் !!


wholesale inkjet photo paper cheap inkjet paper cheap inkjet photo paper wholesale inkjet paper