Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
Mr. VELAPPAN, Thiruvottriyur, Chennai.Back to List
நம் சமுதாயத்தினர் பார்வைக்கு.
-----------------------------
 
மற்ற சமுதாய மக்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் இனத்தின் அடிப்படையில் ஒன்று சேருவார்கள்.
 
நமது இனம் எந்த கட்சியில் இருந்தாலும் கட்சியின் அடிப்படையில்தான் ஒன்றுசேர்வார்கள்.
 
நமது சமுதாயம் விந்தையான சமுதாயம் தவறான தொழில் செய்யத் தெரியாத சமுதாயம் பிழைக்கத் தெரியவில்லை என்றாலும் நேர்மையாக வாழ்ந்தால் போதும் என்று வாழும் சமுதாயம்.
 
யாருக்கும் தீங்கு செய்யாத துரோகம் செய்யாத சமுதாயம்.
 
ஒரு கட்சியில் இணைந்து விட்டால் அந்தக் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டால் அந்த கட்சிக்காக எந்த சூழ்நிலையிலும் தன்னை மாற்றிக் கொள்ளாத சமுதாயம்.
 
லாபம் எங்கெல்லாம் கிடைக்குமோ அங்கெல்லாம் பயணம் செய்யலாம் என எண்ணி வாழாத சமுதாயம்.
 
வெற்றியோ தோல்வியோ ஒரு பக்கம் இருந்து விட்டால் கடைசி வரை அந்தப் பக்கத்திற்கு வாழும் சமுதாயம்.
 
நம் இனம் ஒன்று சேர வேண்டும் என்றால் அவ்வளவு எளிதல்ல
 
குறிப்பாக அனைவருக்கும் நாம் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருக்கிறது அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் யார் தலைமையில் என்பதுதான் மில்லியன் கணக்கான கேள்வி
 
நமது சமுதாயம் ஒன்று படாத தற்கு ஒரே காரணம் நமக்குள் இருக்கும் உட்பிரிவு அதற்கு அடுத்து யாரையும் தலைமையாக ஏற்றுக்கொள்ள முடியாத மாண்பு.
 
எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு வாழும் சமுதாயம்.
 
ஒரு காலத்தில் நிலச்சுவான்தார்கள் ஆகவும் செல்வச் செழிப்போடு வாழ்ந்த சமுதாயம்.  அதே நினைப்பில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயம்.  
 
பொருளாதாரத்தில் எவ்வளவு பின் தங்கி விட்டோம் என்ற எண்ணமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயம்.
 
தமிழ்நாட்டில் ஒரு வேளாளரை அல்லது ஒரு வெள்ளாளர் சமுதாயத்தைச் சார்ந்த நபரை தொடர்பு கொண்டு அரசியலிலோ அல்லது அரசு பணிகளிலும் ஏதாவது நியாயமான காரியம் சாதித்து விட முடியும் என்றால் அதற்கு வாய்ப்பே கிடையாது! ஏனென்றால் சொல்லிக்கொள்ளும்படி மேல்மட்டத்தில் ஏன் மாவட்ட அளவில் கூட ஆட்கள் இல்லை. ஏனென்றால் நாம் தான் யாரையும் வளர விட மாட்டோம் நமது வளர்ச்சிக்கு நாம் தான் எதிரி.
 
மற்ற சமுதாயத்தினர் வளர்ந்து விட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அதை வளர்த்தவர்கள் நாமல்ல அவர்களுடைய ஒற்றுமைதான் அவர்களை வலிமையாக்கியது. 
 
ஏனென்றால் அரசியலும் நாம் எந்தக் கட்சியிலும் முக்கிய பங்கு வகிக்கவில்லை அரசுப் பணிகளை நாம் விட்டுவிட்டு பல மைல் கடந்து வந்து விட்டோம்.
 
நமது சமுதாயத்தில் ஒரு அரசியல் கட்சியை சார்ந்த நபர் தேர்தலுக்கு போட்டியிடுகிறார் என்றால் மற்ற கட்சியில் உள்ள நமது சமுதாயத்தை சார்ந்தவர்கள் உறுதியாக ஒத்துழைப்பு தர மாட்டார்கள் மாறாக தங்களது கட்சியைச் சார்ந்த வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். ஆனால் மற்ற சமுதாயத்தைச் சார்ந்த வர்கள் தங்களை சமுதாயத்தினர் எந்த கட்சியில் நின்றாலும் வாக்கு சமுதாயத்தின் அடிப்படையில்தான் வாக்களிப்பார்கள். 
 
நாம் அனைவரும் சமுதாயத்தை வளர்க்க ஒருங்கிணைக்க போராடுகின்றோம் ஆனால் பிரச்சினையே எந்த தலைவருக்கு கீழ் பணியாற்றுவது என்ற கேள்வியே நமது சமுதாயத்தை ஒன்றினைக்க வாய்ப்பில்லாமல் செய்கிறது
 
ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு இடையில் ஒரு அமைப்பு துவங்கப்படும் அந்த அமைப்பு என்ன சொல்வார்கள் என்றால் தமிழகத்தில் பல்வேறு அமைப்பாக பிரிந்து கிடக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்க போகிறோம் என்று ஆனால் ஒருங்கிணைக்கும் போகின்றோம் என்ற தொடங்கிய அமைப்பும் சில காலத்திற்குப் பின்பு தனி அமைப்பாக மாறி விடும் பிறகு அடுத்த ஆறு மாதம் கழித்து இன்னொருவர் நாம் அனைவரையும் ஒருங்கிணைத்து போகிறோம் என்று ஆரம்பிக்கிறார் 
இது தான் நடைமுறையில் உள்ளது.
 
நமது சமுதாயத்தை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.
 
நமது சமுதாய மனிதர்கள் நல்ல குணாதிசயம் உள்ளவர்கள் கெட்ட தொழில் செய்யத் தெரியாதவர்கள் 
ஈவு இரக்கம் உள்ளவர்கள் பிறருடைய சொத்தை அபகரிக்க தெரியாதவர்கள் தனது சொத்தை பிறருக்காக கொடுப்பவர்கள் என்ற அனைத்து குணாதிசியங்கள் நம்மிடம் உள்ளது.  ஒரே ஒரு குணாதிசயம் மட்டுமில்லை அது தான் யாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட முடியாது. 
 
அனைத்து சமுதாயத்திற்கும் ஆலோசனை சொல்வதிலும் வழி நடத்துவதிலும் ஏணியாக இருந்து  முன்னேற்றுவதிலும் முனைப்பாக இருப்பவர்கள் ஏனோ தனது சமுதாயத்தை மட்டும் ஏணியாக இருந்து ஏற்றி விட விரும்ப வில்லை என்பது புரியவில்லை
 
தற்போது இருக்கும் நமது சமுதாய மக்கள் விட்டுக்கொடுத்து ஒரு தலைமைக்கு கீழ் செயல்பட ஆரம்பிக்கும்போது தமிழகத்தில் நம்மை அசைத்துப் பார்க்க யாருக்கும் துணிவு இருக்காது! 
அந்த நாள் நமது காலத்திலா? 
அல்லது நமது காலத்திற்குப் பின்பா? என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
 
நமது காலம் கடந்து விடும் இப்படி ஒற்றுமை இல்லாமல் போய் கொண்டிருந்தால் நம் சந்ததியினர் நிலை என்னவாகும் என்பதை எண்ணிப் பாருங்கள்
 
வரும் காலங்களில் நாம் சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வோம்.
 
நன்றி  வணக்கம்.