Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
தியாகி கே.நாகலிங்கம்Back to List

தியாகி  கே.நாகலிங்கம்


           இந்தியா நாட்டு மாபெரும் விடுதலை இயக்க வரலாற்றில்  பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு போராட்டம் நடைபெற்றதை அறியலாம். அப்போராட்டக் காலங்களில் புதிய ரத்தமாக எண்ணற்ற இளைஞர்கள்  தியாகத் தீயில் குதிக்க முன்வந்தனர். அவ்வாறு 1942 போராட்டத்தின்போது நாகர்கோயிலிருந்து  வெளிச்சத்திற்கு வந்தவர் உயர்திரு.கே.நாகலிங்கம் அவர்கள்.
      
            நகர்கோவில் நகரின் மையப்பகுதி திழகர் தெருவில் திரு.எஸ்.கோலப்பில்லை, திருமதி.பார்வதியம்மாள் தம்பதியினரின் 2வது மைந்தனாக 11.05.1920-ல் பிறந்தர்.முதல் 8 ஆண்டுகள் திருவனந்தபுரத்திலேயே வாழ்ந்தார்.ஆரம்பத்தில் அவர் படித்தது மலையாளம். பின்னர்  11 ஆம் வகுப்புவரை நாகர்கோவில் ஸ்காட்  கிருஸ்தவ உயர்நிலைப் பள்ளியில் 1939-ல் படிப்பை முடித்தார்.பள்ளி படிப்பின்போதே தேசீய உணர்வால் உந்தப்பட்டு  வேலை  நிறுத்தங்கள், போராட்டங்களில் ஈடுபட்டார். அப்போதெல்லாம் போராட்டக்களத்தில் இறங்கிய மாணவர்களை திரு.நேசமணியின் தூண்டுதலால் தாக்கப்பட்டார்கள். 1942 வரை ஊர் காரியங்களிலும், பொதுத் தொண்டுகளிலுமாக கலம் உண்டோடியது.

             அவரிடம் இயற்கையாக அடங்கி இருந்த  தேசீய  உணர்ச்சியை  1942-ல் தூண்டடியது. இயக்கம் அழைத்தது. அவ்வழைப்பு அவரது ஒவ்வொரு நரம்பையும்  முறுக்கியது.அத்துடிதுடிப்பினால் ஒரு போலீஸ் சி.ஐ.டி. இவரிடம் கம்பால் அடிபட்ட நிலை நேர்ந்ததுண்டு.             திரு.நாகலிங்கத்தின் தேசீய  முன்னோடிகளான, டாக்டர் எம்.ஈ. நாயுடு, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, சிவ முத்துக்கருப்ப பிள்ளை, ஏ.சங்கர பிள்ளை. நாராயணப்பெருமாள்  நாடார் ஆகியோராவார்கள் தீண்டாமை,சுகாதாரம்,கதர்  ஆடை பொன்றவைகள் அன்றைய நிலையில் தேசீயவாதிகளுக்கு கற்பிக்கப்பட்டன. தேசீயவீரர்களுக்கு விடுதலை மட்டுமல்ல நோக்கம், ஆரம்ப  காலத்திலிருந்தே  திரு.கே.நாகலிங்கம் இதை உணர்ந்த்திருக்கிறார். வைசிராஸ்  சுப்பிரமணியம் என்பவர், சிருவர்களுக்கு தக்களில் (இராட்டை) நூற்கக் கற்பித்தும், தேசீயபாடல்களை  சொல்லிக் கொடுத்தும் சுதந்திரக் கனலை முட்டினார்.திரு.கே.நாகலிங்கம் அந்தக்கூட்டத்தில் ஒருவராய் சென்றார். ஆந்திரா இராமானுஜதாஸ் என்பவரின்  தொடர்பும்  அவருக்குக் கிடைத்தது.

             தெருவுக்கு தெரு நடிப்பாதை  கொவில்களையும், அரசியல் கொடிக் கம்பங்களையும் நிறுவும் காலம்  இன்றைய  காலம். இதில் அன்றைய இளைஞர்களின்  தேசீய உணர்வு ஈடுபாடு  அதிகமிருப்பதைக் காணமுடியும். வெள்ளைக்கார அரசுக்கு வெஞ்சாமரை விசிய  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாகர்கோவிலில் 1938-ல் மேலரதவீ தியில், இந்தியாவின் மாபெரும் தேசீயத் தலைவர்  திலகர் பெருமானின் திருபெயாரால் "திலகர் வாலிபர் சங்கம" நூல்  நிலையவாசிப்புச் சாலியை  அமைத்தார். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சங்கத்திற்குசொந்தக் கட்டிடம் கட்டினார். அதுவும் ஒரு கோவில் இடத்தில் கோவில் முன்பாக அமைந்தது. 1942 ஆரம்பத்தில் அந்த நூல் நிலையத்தில் திரு.ஜீவா பேசினார்.அவர் அப்போது பிரிட்டீஸ்  ஆட்சியிலிருந்து நாடுகடத்தப்பட்டிருந்தார். ஜீவாவையும்.சி.பி.இளங்கோவையும், ஜி.எஸ்.மணியையும் அன்று திலகர் வாலிபர் சங்கத்தில் பேச வைத்தவார் நாகலிங்கம் அவர்களே. அன்று திரு நாகலிங்கத்தின் கொள்கையில் முற்போக்கு வாடை விசுகிறதென்றால் அது ஜீவா ஏற்றிய தீபம் என்று சொல்லலாம்.              1942 ஆகஸ்ட் 9,வெள்ளையனே வெளியேறு  போராட்டத்தை மகாத்மா முன் வைத்தார்.நடேங்கும் கிளர்ச்சி, பம்பாயில் குதிரைச் சறட்டு,சென்னையில் கண்ணீர் புகை, நகர்கோவிலும் புரட்சித் தீ, அது  காட்டுத் தியாய்  வெடிக்கவில்லை. ஆனால் எரியத்தான்  செய்தது. வக்கீல்  எஸ்.சுப்பிரமணிய பிள்ளை, சிவமுத்துக்கருப்ப பிள்ளை,கோட்டாறு பத்மசிங், நாகலிங்கம் ஆகியோர் அரசுக்கு எதிராக தடையை மீறினார். காவல்துறையின் ஆதிக்கம் அன்று அத்துமீறியது. கூட்டம் போட்ட  மக்களை  விரட்டினர்.  காட்டுவாசிகளாயினர், அவர்களின் அடிக்குப் பலியான அராஜகத்தைத்  தாங்காத பொதுமக்கள் காவல்துறைக்  கண்காணிப்பில் (போலீஸ்  கேம்பில்) சென்று மறியல் செய்தனர்.

              அன்று இரவு 2 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டென்ட்  சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் போலிசார்  நாகலிங்கத்தைக் கைது செய்தனர். அவர் கோட்டாறு காவல்நிலைய  லாக்கப்பிற்கு அடைக்கப்பட்டார்.பின் குழித்துறை காவல்நிலைய  லாக்கப்பிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும்  விதிக்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரம் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.1942 போரட்டத்தில் முதன்முதளில் கைதான தியாகிகளில் நாகலிங்கமும் ஒருவர். அன்று அவரோடு சிறையில் உடன் இருந்தவர்கள் சிவமுத்துக் கருப்ப பிள்ளை, எஸ்.சிவன் பிள்ளை,பத்மசிங் மற்றும் கேரளத்தில் பிற்காலத்தில் அமைச்சர்களாக இருந்த சி.கேசவன், பட்டம் தாணுபிள்ளை, ஜான் பிலிப்போஸ் மேலும் பலர்.

             1943-ல் விடுதலை பெற்ற நாகலிங்கம் அரசாங்கத்தின் கழுகுக் கண்களின் பார்வையில்தான் இருந்தார்.1943 மார்ச்சில் நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் கிருஷ்ணா ரெடி மெய்டு ஸ்டோர்ஸ் என்ற கடையொன்றை தொடங்கி நடத்திவந்தார்.எனினும் பொதுத் தொண்டை விட்டாறில்லை.அப்போதும் அவருக்கு துன்பம்தான்.1946 சுசிந்திரம் தேரில் கொடிகட்டியதாக வழக்குத் தொடுக்கப்பட்டவர்களில் நாகலிங்கமும் ஒருவர். 2 ஆண்டுகள் அவ்வழக்கில் அவரை அலைக்கழித்த அரசு பின் வழக்கை வாபஸ் பெற்றது.              1945, திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் தன் இன உணர்வு அடிப்படையில் மலையாளம் பேசும் மக்கள் கொண்ட மாநிலம் அமைத்தலை லட்சியமாக ஏற்றுக்கொண்டது.அந்த மலையாளம் பேசும் மாநிலத்தில் திருவிதாங்கூரினுள் சிக்கியுள்ள தமிழர்கள் மிகுதியாக வாழும் 2000 சதுர மைல்களையும் உள்ளடக்கி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை கேரளம் என்ற கோஷத்தை எழுப்பினர். இது  நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தது. அன்று சமஸ்தானக் காங்கிரஸினுள் செயல்பட்டு வந்த தமிழர்களில் ஒருசில இளைஞர்களை கொதிப்படையச் செய்தது, எதிர்ப்பு தோன்றியது. அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்  அமைந்தது. இதுவே 1946-ல் "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்"என பெயர் மாற்றம் பெற்றது. அந்த அ.தி.த. காங்கிரஸின் ஆரம்ப கூட்டத்தை 16.12.1945-ல் கூட்டுவித்த இரு கன்வீனர்களில் திரு.நாகலிங்கமும்,இன்னொருவர் திரு.இரா.வேலாயுதப் பெருமாளும் ஆவர். இந்த நேரத்தில் நாகலிங்கம்,  பி.எஸ்.மணி,ஆர்.கே.ராம் ஆகியோர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நடந்த  காங்கிரஸ் மாநாடுகளுக்குச் சொந்த செலவில் சென்று வந்தனர்.அங்கு சந்தித்த தலைவர்களிடம்  திருவிதாங்கூர்  தமிழ்ப்பகுதிகளை தமிழ்நாடு காங்கிரஸின் கீழ்கொண்டுவர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

             1946-ல் அவருக்கு திருமணம் நடைபெற்றது.கன்னியாகுமரியைச் சேர்ந்த பகவதியம்மாள் அவருக்கு திருமதி ஆனார். அத்திருமணம் கூட அவரது விருப்பத்திற்கு ஏற்ப சீர்திருத்த மணமாக மாபெரும் தியாகி சிவ.முத்துக்கருப்ப பிள்ளை அவர்கள் தலைமையில் மாலை மாற்றலோடு நடைபெற்றது.கதர் அவரது நிரந்தர ஆடை. வெள்ளை நிற கதர் வேஷ்டி, வெள்ளை கதர் ஜிப்பவைத்தான் அணிந்து வந்தார். தன்னுடைய கொள்கைப் பிடிப்பால் அத்தனை உறுதியுடன் செயல்படும்  அக்மார்க் இறையாண்மைக் காவல் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

             அ.தி.த. காங்கிரஸில் சில காலம்  கூட்டு செயலாளர்களில் ஒருவராகவும், பின் பொதுக்குழு  உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். திருதமிழரியக்கத்தின் நியாயங்களை எடுத்துக்கூறி  தமிழ்நாடு மக்களின் ஆதரவு தேட தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட உழைக்கும் உருப்பினர்களில் ஒருவராக பணியேற்று சிறப்பும் செய்துள்ளர்.

              1948-ல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.இதைத் தேர்தல் என்பதைவிட மலையாள அரசுக்கும் திருவிதாங்கூர் தமிழர்களுக்குமிடையே நடைபெற்ற போராட்டம் என்றே  கூறலாம். திரு -  தமிழ் பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதனை தேர்தல் மூலம் நிச்சயப்படுத்தும் போர் என்றே தெரிவிக்கலாம். அப்போரின் போது எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் வீரர்களாக தேர்தல் களத்தில் தீவிரமாகினர். அதில் ஒரு துணிச்சல் மிக்க வீரராக செயல்பட்டவர்  நாகலிங்கம் அவர்கள்.

              1948-ல் திருவிதாங்கூரில் தேர்தல் நடந்தது.அப்போது உண்ணித்தான் என்பவர் திவானாக இருந்தார்.  திருவிதாங்கூர்  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆர்.கே.ராம், ஸ்ரீ.ப.தாஸ், பி.ஜே.பொன்னையா ஆகியொர் தேர்தலின் நின்றனர்.அப்போதெல்லாம் நாகர்கோவில் நகர்மன்றத் திடலில் அரசியல் கூட்டங்கள் நடப்பது வழக்கம்.திலகர் வாலிபர் சங்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் தி.த.நா.காவுக்கு எதிராக நிகழும் அரசியல்  கூட்டங்களில் கலவரம் செய்தனர்.இதனால் சமஸ்தான  காங்கிரசுக் பகை உணர்ச்சி மேலோங்கியது. போலீசைத் தூண்டினர். போலீஸ்  நாகலிங்கத்தின் சகோதரர்  நாகரு பிள்ளையைத் தேடியது. அவரைப் பிடிக்க முடியவில்லை. இதனால் கோபம்கொண்ட போலீஸ் மக்கள்  நடமாட்டம் அதிகமுள்ள பாலமோர் சாலையில் தன் கடையில் அமர்ந்திருந்த   நாகலிங்கத்திடம்  நாகரு பிள்ளை எங்கே என்று கேட்டனர். அவர் எனக்குத் தெரியாது என்றார்.அவ்வளவுதான் ஒரு போலீஸ்  வேனிலிருந்து ரிசர்வ் போலீஸார் நாகலிங்கத்தை கடையிலிருந்து பலவந்தமாக இழுத்து சாலையில் போட்டு பட்டப்பகலில் பலர் பார்க்க அடித்தனர், உதைத்தனர். போலீஸ் வேனின் உள்ளே தூக்கிப்போட முயன்றனர். இச்சமயத்தில் அடுத்து நின்ற கூட்டமும்,பக்கத்துக் கடை  பிரமுகர்களும் இவ்வநியாயத்தை எதிர்த்தும், தடை செய்தும்   கூச்சல் போட்டனர். கலகம்  வரும் என்ற நிலை எட்டியதும் போலீஸார் அவசர அவசரமாக வேனில் ஏற்றிச் சென்றுவிட்டனர்.வழக்கு ஒன்று பதிவு செய்து   திரு.நாகலிங்கத்தையும்,அவரோடு ஒன்பது பேர்களையும் எப்படியும் பிடித்துவிடுவது என மலையாள  போலீஸார் வேட்டை நாய்களாயினர். அகப்பட்டது தளபதி காந்திராமனும், தொண்டர்  அப்துல்  காதரும். இவர்கள் சித்தரவதைக்குட்பட்டனர். அடிப்பட்ட நாகலிங்கம் தி.த.நா.காங்கிரஸ் ஆபீஸில் இருந்த நேசமணியிடமும், நத்தானியலிடமும் சென்றார். தான்பட்ட அவலத்தைச் சொன்னார். மறுநாள்  திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டது. அன்று நகர்மன்றத் திடலில்  கூட்டமும் நடைபெற்றது. பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.நாகலிங்கத்தை போலீஸார் தேடினர். நாகலிங்கம் தமிழ்நாட்டிற்குத் தலைமறையாயினர். அங்கு நாகலிங்கம் தமிழ்த் தலைவர்களைக் கண்டு திருவிதாங்கூர் போலீஸின் அடக்குமுறைப் பற்றிச் சொன்னார். ஆதரவு தேடினார்.               தேர்தல் முடிவுகள் வந்தன.நாகலிங்கத்தை தாக்கிய போலீஸின் ஆராஜகம் தலைகுனிந்தது. திரு.நாகலிங்கம் அன்றுபட்ட அடி,உதை, அம்மாதிரியே திரு.காந்திராமன், திரு.அப்துல்காதர் போன்றவர்கள் பட்ட இடிகள்தாம்  தமிழ் வெட்பாளர்களின் ஓட்டு பெட்டிகள் நிறைந்து வடியவும், எதிரிகள் டிப்பாஸிட் இழக்கவும் செய்தன என்றல் மிகையாகாது. நாகலிங்கம் மிண்டும் நாகர்கோவிலுக்கு திரும்பி வந்தார். கோர்ட்டில் ஆஜராகி வழக்கு நடத்தி வெற்றி பெற்றார்.

               1953,1959 ஆகிய ஆண்டுகளில்  நாகர்கோவில் நகர்மன்றத் தேர்தலில் 11-ம் வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற நாகலிங்கம் செய்த பணிகள் இவை -

1)         இன்று  நாகராஜா திடலாக இருந்த இடம் முன்பு கொசு அரிக்கும் குளமாக இருந்தது.அதை மாற்ற பெரும் முயற்சி செய்து வெற்றி கண்டது.

2)         11-ம்  வார்டில் வீதிகளில், முடுக்குகளில் சிமெண்ட்  மற்றும் தார் சாலைகளை இட நகர்மன்றத்தில்   வெண்டி  வெற்றிக்கண்டது.

3)         பெண்களுக்குரிய  கழிப்பிடங்கள் 11-ல் வார்டில் கட்டிக் கொடுத்தது.

4)         இன்றைய விளையாட்டரங்கை உருவாக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உதவியது.

5)         நாகர்கோவில் நகர்மன்றத்தில் நாகராஜா திடலை 99 வருடங்கள் தனி நபருக்கு குத்தகை விட தீர்மானம் வந்தபோது அதனை உறுப்பினர் திரு.கே.நாகலிங்கம் அவர்கள் சுயநலம் கருதாமல் பொதுநலனுக்காக மேற்படி தீர்மானத்தை எதிர்த்து பேசி தீர்மானத்தை நிரைவெற்ற முடியாமல் செய்து இன்று சுமார்  ரூ.40 கோடி  மதிப்புள்ள நாகராஜ திடலை தனி நபரின் கைக்கு மாறாமல் அரசாங்க சொத்ததாக இருக்கும்படி செய்த பெருமை நாகலிங்கம் அவர்களுக்கே சேரும்.

            இந்தப் பொதுத் தொண்டுகளைச் செய்து வரும்போது 1954-ல் மிண்டும் நாகலிங்கத்தை திருவிதாங்கூர் போலீஸ் தக்கலை சதிவழக்குக்காகத் தேடியது. போலீஸாரின் கைகளில் சிக்காது  தமிழ்நாடுக்கு  தலைமறைவாக இருந்து போராட்டத்தை ஊக்குவித்தார். பல மாதங்கள் நெல்லை மாவட்டத்தில் அலையும் நிலையினுள் அகப்பட்டுக் கஷ்ட நஷ்டங்கள் அனுபவித்தார். அவரது வியாபார நிறுவனம் படுத்துவிட்டது. பொருள்,பணம், நஷ்டம் அவரைப் பல இன்னல்களுக்குள்ளாகியது.

           கன்னியாகுமரி மாவட்டத்தில் 1973-ம் ஆண்டு அரிசி தட்டுப்பாடு அதிகமாகியது. நெல்லை மாவட்