Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
திரு .N. சங்கர்Back to List

பெயர்: N. சங்கர்
பிறப்பு:    01-07-1971
பிறப்பிடம்:   நாகர்கோவிலை அடுத்துள்ள மணத்திட்டை கிராமம்
தந்தையார்:   திரு. என். நீலகண்டபிள்ளை
தாயார்:     திருமதி. ஆர். வைரம்மாள்
கல்வி:     D.E.E.E.,
மனைவி:   திருமதி  கே. முத்துலெட்சுமி
         
குழந்தைகள்:     செல்வி. எஸ். எம்.  வைஷ்ணவி
              செல்வி: எஸ்.எம்.   வைஷாலி

தற்போதைய பணி:   தனியார் மின் உற்பத்தி மையத்தின் மேலாளர்



பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் அமைப்புச்செயலாளாரனான இவர் தன்னுடைய இளம் வயதில்   விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். புதியபுதிய வழிகளில் விவசாயம் செய்வது  என்பதில் ஆர்வம் கொண்டவர். தான் பணிபுரியும் நிறுவனத்தின் வாயிலாக பலருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து இன்று பல இளைஞர்கள் வாழ்வில் ஔ ஏற்றியவர்.

தானும் தனது நன்பர்கள் வட்டத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு  தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார். கல்வி கற்கும் மாணக்கர்களுக்கு ஆண்டு தோறும் தனது உழைப்பில் ஒரு பகுதியை ஏழை மாணவர்களுக்காக உதவி செய்து வருகிறார். யாரேனும் தன்னை நாடி வந்து உதவி என கேட்டால் தன்னால் முடிந்தால் தானும் அது இல்லாத நிலையில் தனது நன்பர்கள் மூலமாகவும் செய்து கொண்டிருக்கும் பண்பாளர். பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கம் நடத்தும் ஆண்டுவிழாவில் இவரது பங்கு அலாதியான ஒன்று. வசதி படைத்தோரை நாடிச்சென்று அவர்களிடம் நிதி உதவி பெற்று அதன் மூலம்  கல்வி உயர்மதிப்பெண் பெற்றோருக்கு பணப்பரிசும்  உதவிகளும் சங்கம் செய்ய உதவுபவர்.   வெள்ளாளர் சமுதாயத்தவரின் நலன் காக்க  சங்கம் அறிவிக்கும் போராட்டங்களில்  மிக தீவிரமாக பணியாற்றும் செயலாக்க வீரர்.

தான் வாழும் மணத்திட்டை கிராம வெள்ளாளர் சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து சமுதாய நலன் பேணும் செயல்களை மேற்கொண்டு வருகிறார்.   அந்த சமுதாயத்திற்கு உட்பட்ட  மிகப்பழமை மூன்று தலைமுறைகளை கடந்த அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலை புனருத்தாரணம் செய்து குடமுழுக்கு நடத்த இவரது தலைமையில்  அந்த ஊர் சமுதாயத்தார் குழு அமைத்து திருப்பணி நடக்கிறது. இப்பணியில் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறார். இறைப்பணியும்  சமுதாயப்பணியும்  ஏழைகளுக்கு உதவும் அருட்பணியும் கொண்ட இந்த  39 வயதான இந்த இளைஞரின் வாழ்க்கை  இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாகும்.