Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
அவசர உதவி குழு

இப்பூமியில், எந்த மூலையில் யாருக்கு என்ன பிரட்சினை என்றாலும், அங்கே நம் இனத்தவர்கள் இருந்தால், மற்றவர்கள் பிரட்சினையை தம் பிரட்சினையாக நினைத்து, பாதிக்கபட்டவர்களுக்காக போராடி, வென்று ,சத்தியத்தை நிலை நாட்டுவதில் வெகு சமர்த்தர்.

தாம் செய்யும் பணி, இறைவன் தனக்கு இட்ட கட்டளையாக கருதி,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் நலன் கருதாமல், பிறர்க்கு உதவும் நேர்மையாளர்கள் , மனசாட்சிக்கு பயப்படுபவர்கள்.

மானத்திற்கு அஞ்சுபவர்கள், சுடு சொல் தாங்காதவர்கள், எனினும் மற்றவர்களுக்காக போராடும் அசுர வேகம், தனக்கென்று ஒரு பிரட்சினை வரும் போது , தன்னிடம் நியாயம் இருந்தாலும், மானத்திற்கு அஞ்சி , வெட்கப்பட்டு, தான் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டவர்களை போல் மனம் குழம்பும் நல்லவர்கள்.

ஆனால் உலகம் அவ்வாறில்லை.
நாட்டை சுரண்டும் கயவர்களும், பிறர் பொருளுக்கு ஆசைபடுபவர்களும், ஏமாற்றி பிழைப்பவர்களும், மக்களை பயமுறுத்தி பலன் காண்பவர்களும்,  பொய்யர்களும் நிறைந்த உலகத்தில், நம் குணத்தை மாற்றாமல், நம்மை பாதுகாக்க முயலவே  இம்முயற்சி.

ஊருக்கெல்லாம் உதவும் நாம், நமக்குள்ளும் , அதே வேகத்துடன் உதவ முன் வருவோம்.
உங்களின் பொன்னான நேரத்தில், சில மணி துளிகளை , நம் சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவ தயாராகுங்கள்.

உங்களுக்கும் ஒரு நாள் , இவ்வுதவி தேவைபடும் நேரம் வரலாம், வராமல் இருக்க வேண்டுவோம்.

நீங்கள் சார்ந்திருக்கும் நாஞ்சில் வெள்ளாளர்  சங்கங்களில் "அவசர உதவி குழு உறுப்பினராக" உடன் பதிவு செய்யுங்கள் .
சங்கம் உங்களுக்கு வழி காட்டும்.  நன்றி !